இந்தியா

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published On 2024-05-18 16:05 IST   |   Update On 2024-05-18 16:05:00 IST
  • ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார்.
  • ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

5 ரூபாய்க்கு இன்று எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் கருதுவீர்கள், ஆனால் அது ஜாம்நகரில் உள்ள மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கணினி ஆபரேட்டரை சிறையில் அடைத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு வருவாய் ஆவணங்களை வழங்க ரூ.5 லஞ்சம் வாங்கியதாக நவீன்சந்திர நகும் என்பவதை லஞ்ச தடுப்புத் துறை கைது செய்துள்ளது.

46 வயதான நகும், 2013ம் ஆண்டு முதல் கிராமத்தில் கணினி தொழில்முனைவோராக (VCE) இரண்டு மணி நேரம் மட்டும் பணியாற்றி வந்தார்.

பொதுவாக ஒவ்வொரு ஆவணத்திற்கும், விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ. 5 பெறுவதாகவும், இதில், ரூ. 3 நகுமிற்கும் ரூ. 2 அரசாங்கத்திற்கும் கொடுக்கப்படுகிறது.

ஆனால், நகும் ஒரு ஆவணத்திற்கு ரூ.10 வசூலித்து ரூ.5ஐ கமிஷனாகவும் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து லஞ்ச தடுப்பு துறையினர் நகுமை கைது செய்துள்ளனர்.

மேலும், நகும் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் ஏசிபி குஜராத் இயக்குனரான ஷம்ஷேர் சிங் கூறறுகையில், "லஞ்சத் தொகை சிறியதாக இருந்தாலும், கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்றார்.

Tags:    

Similar News