இந்தியா
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப், பிரதமர் மோடி

சீனாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படக் கூடாது - காங்கிரஸ் கட்சி கருத்து

Published On 2022-01-03 20:17 GMT   |   Update On 2022-01-03 20:17 GMT
இந்திய எல்லைக்குள் சீன அத்துமீறல் முறியடிக்கப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

இந்திய எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோவை சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.  இதை சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி தேசிய பாதுகாப்பில் பிரதமர் மோடி அரசு சமரசம் செய்வதாக குற்றம் சாட்டி உள்ளது.  

இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

பிரதமர் அவர்களே, சீனர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் சீனக் கொடியை எப்படி ஏற்றினார்கள் என்பதையும், ஒரு அங்குல நிலத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டோம் என்று சீன மொழியில் எழுதியதையும் இந்திய நாட்டு மக்களும் உலகமும் அறிய விரும்புகின்றன. பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?

பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? இந்தியாவின் எல்லைக்குள் சீன அத்துமீறலை தோற்கடிப்பதை உறுதி செய்வது நமது அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கடமை. 

அரசியலமைப்பு, தார்மீக, சட்ட மற்றும் நெறிமுறை ரீதியாக இது பிரதமரின் கடமை.பிரதமர் சீனாவை கண்டு பயப்பட வேண்டாம்.  சீன அத்துமீறல் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
Tags:    

Similar News