இந்தியா
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மத்திய அரசு தோல்வியால் நாட்டில் விலைவாசி, வேலையின்மை அதிகரிப்பு: ராகுல் காந்தி

Published On 2021-12-08 09:07 GMT   |   Update On 2021-12-08 09:07 GMT
நாட்டில் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடி அரசு கண்டு கொள்வதில்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:

நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் விவசாய நெருக்கடிக்கு மோடி அரசின் தோல்வி மற்றும் ஆணவமே அடிப்படைக் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "  காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதோடு, மக்களின் மனதைக் கேட்டு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகிறது.

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாய நெருக்கடி, சீனாவின் ஆக்கிரமிப்பு இவை அனைத்திற்கும் வேர் ஒன்றுதான்- அவை மோடி அரசின் தோல்விகள், ஆணவம் மற்றும் நண்பர்கள் மீதான அன்பு.
 
மக்களின் பிரச்சினைகளை மோடி அரசு கண்டு கொள்வதில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
Tags:    

Similar News