search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
    X
    பாராளுமன்றக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி

    சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டம்

    இந்நிலையில், கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எல்லைப் பிரச்சினைகள் குறித்து முழு விவாதம் நடத்த வேண்டும்.

    12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது தங்கள் உயிரை தியாகம் செய்த 700 விவசாயிகளுக்கும் உரிய மரியாதை செலுத்துவோம். விவசாயிகள் மற்றும் சாமானியர்கள் மீது மோடி அரசு உணர்வற்றதாக இருக்கிறது.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டையும் எரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்: மத்திய மந்திரி தகவல்
    Next Story
    ×