இந்தியா
கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு?

Published On 2021-12-08 04:58 GMT   |   Update On 2021-12-08 06:33 GMT
ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலையின்போது ஏராளமானோர் இறந்தனர்.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

இதனால் கொரோனா உயிரிழப்புகளும், பரவலும் கட்டுக்குள் வந்தது. கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வாங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசி 250-ல் இருந்து 275 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஆயுட்காலம் 9 மாதங்கள் ஆகும். கோவிஷீல்டுக்கான தேவையைவிட சப்ளை அதிகமாக இருப்பதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தோம்.

மத்திய அரசு ஏற்கனவே கொடுத்துள்ள ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. மீண்டும் ஆர்டர் வராததால் உற்பத்தியை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளோம்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News