செய்திகள்
பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ஊரடங்கு தேவை இல்லை: பசவராஜ் பொம்மை பேட்டி

Published On 2021-11-30 03:12 GMT   |   Update On 2021-11-30 03:12 GMT
கர்நாடகத்தில் ஊரடங்கு தேவை இல்லை என்றும், ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
சிக்கமகளூரு

தென்ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கர்நாடகத்திலும் பரவி விடும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், 3-வது அலை வராமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாது. அதேபோல் கர்நாடகத்தில் ஊரடங்கு தேவை இல்லை. வெளிநாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கேரளாவிலிருந்து வரும் அனைவரையும் கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம்.

ஆகையால் கொரோனா 3-வது அலை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகத்திற்கு வந்த நபருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு மாதிரியை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரை, மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்தாலும் ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News