செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 31,382 பேருக்கு தொற்று

Published On 2021-09-24 05:55 GMT   |   Update On 2021-09-24 07:41 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 152, மகாராஷ்டிராவில் 61 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 318 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,368 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 31,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. இதனால் மொத்தபாதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 94 ஆயிரத்து 803 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 19,962, மகாராஷ்டிராவில் 3,320, தமிழ்நாட்டில் 1,745, மிசோரத்தில் 1,257, ஆந்திராவில் 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 152, மகாராஷ்டிராவில் 61 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 318 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,46,368 ஆக உயர்ந்தது.

கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று ஒரே நாளில் 32,542 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 48 ஆயிரத்து 273ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. அதாவது 3,00,162 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 72,20,642 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 84.15 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.

Tags:    

Similar News