செய்திகள்
செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலம்

வசாய் கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

Published On 2021-09-23 03:07 GMT   |   Update On 2021-09-23 03:07 GMT
வசாய் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
வசாய்:

பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு மார்டெஸ் கடற்கரையில் நேற்றுமுன்தினம் திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் 30 டன் எடையுள்ள 40 அடி நீளமுள்ள திமிங்கலம் எனவும், கடலில் உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராட்சத கிரேன் வரவழைத்து அதனை புதைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News