செய்திகள்
ராகுல் காந்தி

அரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி - ராகுல் காந்தி கண்டனம்

Published On 2021-08-28 18:03 GMT   |   Update On 2021-08-28 18:03 GMT
பாரதிய கிசான் யூனியனின் அரியானா தலைவர் குர்ணம் சிங் சாதுனி கூறுகையில், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
சண்டிகர்:

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று  கர்னலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்னலின் கராண்டா சுங்கச்சாவடி அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார்  தடியடி நடத்தினர்.

இதையடுத்து, விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அரியானா முழுவதும் சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்டம் குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா தர்ஷன் பால் கூறியதாவது:

அமைதியாகப் போராட்டம் நடந்த போதிலும் விவசாயிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில், அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டரில் "மீண்டும் விவசாயிகளின் ரத்தம் சிந்தி உள்ளது. இது இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News