செய்திகள்
நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி

3ம் ஆண்டு நினைவு தினம்- வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை

Published On 2021-08-16 02:55 GMT   |   Update On 2021-08-16 06:23 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

பா.ஜனதா தலைமையிலான அரசின் முதல் பிரதமரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி தனது 93-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தினார்கள்.




மேலும் வாஜ்பாய் குடும்பத்தினரும் இன்று காலை அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இதையும் படியுங்கள்...ஜார்க்கண்ட் நீதிபதி கொலையில் துப்பு கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு - சிபிஐ அறிவிப்பு
Tags:    

Similar News