search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ
    X
    சிபிஐ

    ஜார்க்கண்ட் நீதிபதி கொலையில் துப்பு கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு - சிபிஐ அறிவிப்பு

    நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்க்கண்ட் நீதிபதி கொலை தொடர்பான விசாரணையை ஜார்க்கண்ட் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது.
    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வந்த உத்தம் ஆனந்த் (49) என்பவர், கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சிக்கு சென்ற அவரை ஆட்டோவால் மோதி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இந்த வழக்கை மாநில அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

    நீதிபதியை நோக்கி செல்லும் ஆட்டோ

    இந்நிலையில், விசாரணையை தொடங்கி உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இந்தக் கொலை தொடர்பாக துப்பு கொடுப்போருக்கு பரிசு அறிவித்துள்ளனர். 

    அந்த வகையில் நீதிபதி கொலை தொடர்பாக யாரிடமாவது முக்கிய தகவல் எதுவும் இருந்தால், சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதற்கான தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
    Next Story
    ×