செய்திகள்
மல்லிகார்ஜுன் கார்கே

தேர்தலுக்காகவே மந்திரிசபையில் மாற்றம் - மல்லிகார்ஜுன் கார்கே

Published On 2021-07-07 13:04 GMT   |   Update On 2021-07-07 13:17 GMT
மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி:

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரிசபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கான 43 புதிய மத்திய மந்திரிகளின் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டது. புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.  



இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலைக் காரணமாகவே மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த புதிய மந்திரிசபையில், பட்டியல் வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பான்மையாக மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது, தேர்தலை மனதில் கொண்டே இதனை மத்திய அரசு செய்துள்ளது. இது மக்களை திசைதிருப்பும் முயற்சி. இவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் நன்மையை செய்துவிடப் போவதில்லை” என்று அவர் கூறினார். 

Tags:    

Similar News