செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் கொடுக்க இயலாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

Published On 2021-06-20 08:02 GMT   |   Update On 2021-06-20 09:41 GMT
கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்து தனது கொள்கையை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

புதுடெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்து தனது கொள்கையை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.


இதை தொடர்ந்து மத்திய அரசு 183 பக்க பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3.85 லட்சத்துக்கும் மேல் உள்ளது. ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு கொடுக்க இயலாது. இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு நிவாரணம் வழங்க முடியும். தற்போது சுகாதார செலவு அதிகரித்துள்ளது. மேலும் வருவாயும் குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Tags:    

Similar News