செய்திகள்
சுகாதார துறை மந்திரி ஹர்ஷ்வர்தன்

தமிழகத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளோம் - மத்திய சுகாதார அமைச்சகம்

Published On 2021-06-03 20:04 GMT   |   Update On 2021-06-03 20:04 GMT
இந்தியா முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என சில ஊடகங்களில் வெளியான தகவலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு பதிலளித்துள்ளது.

இதன்படி, ஜூன் 2-ம் தேதி வரை, தமிழகத்திற்கு 1 கோடிக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் 93.3 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் கையிருப்பில் 7.24 லட்சம் டோஸ்கள் உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரையில் தமிழகத்திற்கு மொத்தம் 7.48 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் வழியே கிடைக்கும்.

ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெறும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News