செய்திகள்
பசவராஜ் பொம்மை

கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2021-05-31 03:19 GMT   |   Update On 2021-05-31 03:19 GMT
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வேண்டும். வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க அனைவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும்.
பெங்களூரு :

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைய வேண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வேண்டும். வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க அனைவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். இத்தனை நாட்கள் பொதுமக்கள் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இன்னும் ஒரு வாரம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா பரவலை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஒருவேளை வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதை கட்டுப்படுத்துவது கடினமானதாகிவிடும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளாார்.
Tags:    

Similar News