செய்திகள்
மத்திய மந்திரி ஹா்ஷ்வா்தன்

இந்தியா 123 நாடுகளுக்கு மருந்து உதவிகள் வழங்கியுள்ளது - மத்திய மந்திரி ஹா்ஷ்வா்தன்

Published On 2021-05-28 00:44 GMT   |   Update On 2021-05-28 00:44 GMT
இந்தியா 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமைப்பு சாரா நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் பங்கேற்றிருந்தார்.
அந்தக் கூட்டத்தில் அமைச்சா் ஹா்ஷ்வா்தன் பேசியதாவது:

கொரோனா சூழலில் இந்தியாவுக்கான தேவை அதிகமாக இருந்தும், 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை உறுதி செய்துள்ளோம். அதில் 59 நாடுகள் அமைப்பு சாராத நாடுகளாகும்.

உலக அளவிலான கொரோனா தொற்று சார்ந்த பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி நடவடிக்கைகளில் இந்தியா மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எல்லோருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வரை, ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணா்ந்திருக்கிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News