செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலை நீடித்தால் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? டெல்லி முதல்வர் கவலை

Published On 2021-05-26 11:23 GMT   |   Update On 2021-05-26 13:15 GMT
புதிய தடுப்பூசி மையங்களைத் திறக்க வேண்டிய நிலையில், இருக்கும் தடுப்பூசி மையங்களையும் மூடுவது நல்லதல்ல என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லை. 4 நாட்களுக்கு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று நாம் புதிய மையங்களைத் திறந்திருக்க வேண்டும். ஆனால் இருக்கும் தடுப்பூசி மையங்களையும் மூடுகிறோம். இது நல்லதல்ல.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நேரம் இது. தனித்தனியாக செயல்படக்கூடாது. ‘டீம் இந்தியா’வாக நாம் பணியாற்ற வேண்டும். தடுப்பூசி வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு, மாநிலங்களின் பொறுப்பல்ல. தடுப்பூசி போடுவதை நாம் இன்னும் தாமதப்படுத்தினால், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும் என்று தெரியவில்லை.



இந்த நாடு ஏன் தடுப்பூசிகளை வாங்கவில்லை? இந்த பணியை நாம் மாநிலங்களிடம் விட்டுவிட முடியாது. நம் நாடு கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், நாம் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ளும் என்று பொறுப்பை அவர்களிடம் விட்டுவிடுவோமா? 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News