செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் - பினராயி விஜயன்

Published On 2021-05-24 18:11 GMT   |   Update On 2021-05-24 18:11 GMT
கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசிடம் மட்டுமே நேரடியாக விநியோகிப்போம் என பைசர், மாடர்னா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசிடம் மட்டுமே நேரடியாக விநியோகிப்போம் என பைசர், மாடர்னா நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான கொரோனா தடுப்பூசிகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப மத்திய அரசே உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை மேற்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகளுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும். மாநிலங்கள் தனித்தனியாக கொள்முதல் செய்தால் அது விலையேற்றத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News