செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனாவை எதிர்த்து முழு பலத்துடன் அரசு போராடுகிறது: பிரதமர் மோடி

Published On 2021-05-15 01:55 GMT   |   Update On 2021-05-15 01:55 GMT
விரைவாக இன்னும் இன்னும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றுபட்டு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன.
புதுடெல்லி :

‘பி.எம்.கிசான்’ திட்டத்தின் 8-வது தவணையாக 9½ கோடி விவசாயிக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வங்கிக்கணக்குகளில் செலுத்தும் நிகழ்ச்சி, காணொலி காட்சி வழியாக நேற்று நடந்தது.

இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நூற்றாண்டுக்கு ஒரு முறை வருகிற பெருந்தொற்றுநோய், உலகுக்கே சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் இது நம் முன்னே கண்ணுக்குத் தெரியாத எதிரியாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசு முழுபலத்துடன் போராடுகிறது. நாட்டின் வலியைக் குறைப்பதற்காக அரசின் ஒவ்வொரு துறையும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றன.

விரைவாக இன்னும் இன்னும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றுபட்டு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கிராமப்புறங்களிலும் கொரோனா பரவுகிறது. அந்தந்த பகுதிகளில் முறையான விழிப்புணர்வையும், சுகாதாரத்தையும் கிராம பஞ்சாயத்துகள் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News