செய்திகள்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள் - பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்

Published On 2021-04-18 19:49 GMT   |   Update On 2021-04-18 19:49 GMT
தடுப்பூசி எண்ணிக்கையை கணக்கு பண்ணாமல் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விஷயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.



இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

சரியான கொள்கை வடிவம் இருப்பின் இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் .

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News