செய்திகள்
ஜெயலலிதா

ஜெயலலிதாவுடன் இவரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Published On 2021-02-19 05:10 GMT   |   Update On 2021-02-19 05:10 GMT
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இவர் இருப்பதாக கூறி இணையத்தில் வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் மற்றொரு பெண்மணி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஜெயலலிதாவுடன் இருப்பது தற்போதைய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகைப்படத்தை ஆய்வு செய்ததில் ஜெயலலிதாவுடன் இருப்பது பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி என தெரியவந்தது. இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவர். இந்த புகைப்படத்தை தமிழ் இதழ் ஒன்றுக்காக புகைப்பட கலைஞர் ரவி வர்மா எடுத்தார்.

புகைப்படத்தின் கீழ் “kliked by stills ravi” என அச்சிடப்பட்டு இருக்கிறது. இதனை இணையத்தில் தேடிய போது ரவி வர்மா வி என்பவரே சமூக வலைதளங்களில் ஸ்டில்ஸ் ரவி என அறியப்படுகிறார் என தெரியவந்தது. முன்னதாக இதே புகைப்படம் இதே தகவலுடன் கடந்த ஆண்டும் மவைரலானது. 



பின் ரவி வர்மா தனது பேஸ்புக் அக்கவுண்ட் மூலம், புகைப்படத்தை எடுத்தது தான் என்றும் அதில் ஜெயலலிதாவுடன் இருப்பது சிவசங்கரி தான் என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் ஜெயலலிதாவுடன் இருப்பது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News