செய்திகள்
மோதிலால் வோரா

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு - பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்

Published On 2020-12-21 17:46 GMT   |   Update On 2020-12-21 17:46 GMT
மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போபால்:

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோதிலால் வோரா (93), உடல்நலக்குறைவு காரணமாக இன்று  காலமானார்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர், நுரையீரல் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் 2002 முதல் 2018 வரை 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்துள்ளார். மேலும், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் கவர்னராகவும் இருந்துள்ளார். 

மோதிலால்  வோரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி உள்பட  காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News