இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை நம் தேசம் காண்கிறது என உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா நேற்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் பிரதமர் மோடியும் அமித்ஷாவை வாழ்த்தினார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் அமித்ஷா ஜி. இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பை நம் தேசம் காண்கிறது. பா.ஜனதாவை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை. இந்தியாவின் சேவையில் அவருக்கு நீண்ட ஆயுளை கடவுகள் வழங்கட்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்