செய்திகள்
சிவசங்கர்

கேரள தங்க கடத்தல் வழக்கு - முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலரை கைது செய்ய தடை

Published On 2020-10-19 11:28 GMT   |   Update On 2020-10-19 11:28 GMT
கேரள தங்க கடத்தல் வழக்கில் சுங்கத்துறை சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் மாநில முதல்மந்திரியின் முன்னாள் முதன்மை செயலரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடந்த ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட 20 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஸ்வப்னாவுடன் கூட்டாளியாக செயல்பட்ட கும்பல், திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பு 2020ம் ஆண்டு ஜூன் வரை சுமார் 19 முறை தங்கத்தை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நவம்பர் மாதத்தில் நான்கு முறை, டிசம்பரில் 12 முறை, ஜனவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் தலா ஒரு முறை சட்டவிரோதமாக தங்கம் கடத்தி உள்ளனர். ஸ்வப்னாவும், அவரது கும்பலும் டிசம்பரில் மட்டும் 36 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர்.

இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில், சுங்கத்துறை சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் சிவசங்கர் கைது செய்யப்படாமல் என தகவல்கள் வெளியானது.

இதனால், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சிவசங்கர் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனுவை விசாரித்த முன்னாள் முதன்மை சிவசங்கரை 23-ம் தேதிவரை கைது செய்ய சுங்கத்துறையினருக்கு தடைவிதித்தது. முன்னதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் வரும் 23-ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய நீதிமன்றம் தடைவிதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News