செய்திகள்
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

ஹத்ராஸ் செல்லும் போது ராகுல் மற்றும் பிரியங்கா அப்படி செய்ததாக வைரலாகும் வீடியோ

Published On 2020-10-07 05:17 GMT   |   Update On 2020-10-07 05:17 GMT
ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் வழியில் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி அப்படி செய்ததாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் ஹத்ராஸ் செல்லும் போது இருவரும் கிண்டல் செய்து பேசியதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

வைரல் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருவரும் சகஜமாக சிரித்து பேசும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இவை இருவரும் ஹத்ராஸ் செல்லும் வழியில் எடுக்கப்பட்டதாக கூறி பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவை ஏப்ரல் 27, 2019 அன்று எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இவை இருவரும் உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது ஆகும். கட்சி விவகாரம் தொடர்பாக அங்கு சென்றிருந்தனர்.

அந்த வகையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஹத்ராஸ் செல்லும் போது அப்படி நடந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News