செய்திகள்
அஸ்வத் நாராயண்

கர்நாடக மாநில துணை முதல்-மந்திரிக்கு கொரோனா

Published On 2020-09-19 23:32 GMT   |   Update On 2020-09-19 23:32 GMT
கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையடுத்து, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சபாநாயகர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தனது டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும், எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை. கொரோனா அறிகுறி இல்லாத காரணத்தால், டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News