செய்திகள்
கவச உடை

கவச உடைகள் உற்பத்தி விதிமுறையில் தளர்வு - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-06-25 06:38 GMT   |   Update On 2020-06-25 06:38 GMT
பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற கவச உடைகள் உற்பத்திக்கான விதிமுறையை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தொற்று பரவாமல் இருப்பதற்காக பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற கவச உடைகள், கருவிகளை அணிந்து கொள்கிறார்கள்.

இவற்றின் உற்பத்திக்கான விதிமுறையை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தரமான கவச உடைகளையும், கருவிகளையும் வினியோகிக்க வசதியாக இந்த தளர்வு செய்யப்பட்டுள்ளது. வடிகட்டியுடன் கூடிய அரை முக கவசங்கள், அறுவைசிகிச்சை முக கவசங்கள், கண் பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அமைப்பான இந்திய தர நிர்ணய பணியகம் கூறுகிறது. முன்பு இவற்றை உற்பத்தி செய்வதற்கு உள்சோதனை வசதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. இது தளர்த்தப்பட்டுள்ளது. இனி பி.பி.இ. உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பு மாதிரிகளை இந்திய தர நிர்ணய பணியகம் உரிமம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் அல்லது அந்த அமைப்பினால் பட்டியலிடப்பட்ட தனியார் அல்லது அரசு ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்து கொள்ளலாம்.
Tags:    

Similar News