search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவச உடை"

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.
    • கவச உடை அணிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    மதுரை

    உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொ டங்கி விட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இன்றும், நாளையும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகளை நடத்தும்படி மத்திய அரசு அறிவித்தி ருந்தது. அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று மதியம் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது. டீன் ரத்தினவேல் தலை மையில் டாக்டர்கள் கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கு சென்று சிகிச்சை அளித்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்யப் பட்டது. தொடர்ந்து கொரோனா அறிகுறி இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு ஒத்திகையில் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    ×