செய்திகள்
நிர்மலா சீதாராமன்

புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினையை அரசியல் ஆக்கவேண்டாம்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்

Published On 2020-05-18 03:46 GMT   |   Update On 2020-05-18 03:46 GMT
மாநில அரசுகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி :

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, மாநில அரசுகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த வி‌‌ஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது என்றும் கூறினார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் பொறுப்புடன் பேச வேண்டும் என்று சோனியா காந்தியை, தான் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அப்போது அவர் கூறினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு கூறினார்.
Tags:    

Similar News