செய்திகள்
மைக்ரோசாப்ட் லோகோ வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறதா?

Published On 2020-05-08 05:07 GMT   |   Update On 2020-05-08 05:07 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், வயல்வெளி ஒன்றில் கொரோனா வைரஸ் மற்றும் மைக்ரோசாப்ட் லோகோ இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை வைத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் படம் மற்றும் மைக்ரோசாப்ட் லோகோ சமீபத்தில் தோன்றியது. இரு புகைப்படங்களின் படி பில் கேட்ஸ் மற்றும் கொடிய வைரசுக்கும் தொடர்பு இருக்கலாம் என வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஆய்வில் வைரலாகும் புகைப்படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வைல்ட்ஷையர் பகுதியில் உள்ள கோதுமை வயல்வெளியில் எடுக்கப்பட்டதாகும். அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 



முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் பில் கேட்சுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதில் பில் கேட்ஸ் துவங்கிய ஆய்வு மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்றும் பில் கேட்ஸ் உருவாக்கி இருக்கும் மருந்து மைக்ரோசிப் மூலம் நோயை கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் என கூறப்பட்டு இருந்தது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News