செய்திகள்
ஜிஎஸ்டி

மத்திய அரசு ஜிஎஸ்டி பணத்தை திரும்ப வழங்குகிறதா?

Published On 2020-05-07 04:28 GMT   |   Update On 2020-05-07 04:28 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களின் படி கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையை திரும்ப வழங்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையை திரும்ப வழங்க புதிய திட்டத்தை துவங்கியுள்ளதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



வைரல் தகவல்களுடன் ஜிஎஸ்டி தொகையை திரும்ப பெற வலைதள முகவரி (“http://Onlinefilingindia.in”) ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. வைரல் தகவல்களில் மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையை திரும்ப வழங்க ஆன்லைன் வழிமுறைகளை துவங்கி உள்ளதாகவும், தொகையை பெற இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வு செய்ததில் சமூக வலைதளங்களில் வலம் வரும் இணைய முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை ஆணையம் பணத்தை திரும்ப வழங்குவதாக கூறும் எந்த போலி இணைய முகவரிகளையும் பொதுமக்கள் க்ளிக் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது. 



மேலும் ஜிஎஸ்டி சார்ந்த விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ வலைதள முகவரியையும் வழங்கியுள்ளது. இதுதவிர மத்திய அரசின் ஜிஎஸ்டி வலைதளத்திலும் போலி வலைதளங்களை மக்கள் நம்ப வேண்டாம் என கூறும் அறிக்கையை ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி பணத்தை திரும்ப வழங்குவதாக இதுவரை எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News