செய்திகள்
கொரோனா கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ இவர்தான் காரணமா?

Published On 2020-05-04 04:31 GMT   |   Update On 2020-05-04 04:31 GMT
தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ இவர்தான் காரணம் என கூறும் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



தப்லிகி ஜமாத் நடத்திய சிறப்பு தொழுகை காரணமாக இந்தியாவில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அதில் கலந்து கொண்ட பலர் அரசு அதிகாரிகளுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இஸ்லாம் மதத்தவர் தான் கொரோனாவை இந்தியாவில் பரப்பியதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் சத்குரு நடத்திய சிறப்பு கூட்டத்தால் தான் தமிழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளில் மார்ச் மாத வாக்கில் சத்குரு நடத்திய கூட்டத்தில் சுமார் 150-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகளுடன் சத்குரு நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஈஷா பவுன்டேஷன் சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட நிகழ்வு பிப்ரவரி 21 ஆம் தேதி மகாசிவராத்திரி தினத்தில் நடைபெற்றது தெரியவந்துள்ளது. மேலும் நிகழ்வில் வெளிநாட்டினர் கலந்து கொண்டிருந்த போதும் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி ஏற்படவோ, நோய் தொற்று உறுதி செய்யப்படவும் இல்லை.

அந்த வகையில் தமிழ் நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவ இவர் காரணமில்லை என உறுதியாகிவிட்டது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News