செய்திகள்
வைரல் புகைப்படம்

நெட்டிசன்களால் புதிய சர்ச்சையில் சிக்கிய சீனா

Published On 2020-05-01 05:15 GMT   |   Update On 2020-04-30 12:28 GMT
சமூக வலைதளங்களில் வலம் வரும் புதிய தகவல்களால் சீனா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.



உடைகள் மற்றும் போர்வைகள் மூட்டைக்கட்டி வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் மூலம் சுற்றப்பட்டு இருக்கும் உடைகள் மற்றும் போர்வைகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பயன்படுத்தியவை என்றும் இவை பீஜிங்கில் இருந்து ஆப்ரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு இருக்கிறது. 

'இங்கு வைக்கப்பட்டு இருக்கும் உடைகளை சீனாவில் உயிரிழந்தவர்கள் பயன்படுத்தியவை. அவர்கள் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர். இவை ஆப்ரிக்காவுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும்,' என வைரல் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



ஆய்வு செய்ததில், வைரல் புகைப்படத்துடன் வலம் வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரிகிறது. மேலும் இந்த புகைப்படம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேல் இணையத்தில் வலம் வருவது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.

எனினும், வைரல் தகவல்கள் உண்மையென நம்பி பல ஆயிரம் பேர் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் இந்த புகைப்படம் ஆகஸ்ட் 2013 இல் எடுக்கப்பட்டதாகும். பயன்படுத்தப்பட்ட ஆடைகள் என இதே புகைப்படம் பலமுறை இணையத்தில் வலம் வந்திருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News