செய்திகள்
டிக் டாக்

மகாராஷ்டிரா அரசுக்கு டிக் டாக் நிறுவனம் ரூ.5 கோடி கொரோனா நிவாரண நிதி

Published On 2020-04-30 03:03 GMT   |   Update On 2020-04-30 03:03 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் மிக பிரபலமான டிக் டாக் நிறுவனம் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி கொடுத்து உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் மிக பிரபலமான டிக் டாக் சமூக வலைத்தளத்தை உருவாக்கிய சீனாவின் பைட்டுடான்ஸ் நிறுவனம் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதி கொடுத்து உள்ளது.

இதுகுறித்து டிக் டாக் இந்தியா தலைவர் நிகில் காந்தி கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா முழுவதும் எங்கள் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே மாநிலத்திற்கான சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா போலீசுக்கு ஒரு லட்சம் முக கவசங்களையும் வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது” என்றார். 
Tags:    

Similar News