செய்திகள்
மத்திய அரசு

மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்: மத்திய அரசு

Published On 2020-04-24 03:41 GMT   |   Update On 2020-04-24 03:41 GMT
பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தயாரித்து வருகிறது. கொரோனாவால் உண்டான வாய்ப்பை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி :

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு, மே 3-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, வருகிற 27-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், ஊரடங்குக்கு பிந்தைய சூழ்நிலை குறித்து பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், வர்த்தக தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மே 3-ந் தேதிக்கு பிறகு பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் செயல்பட தொடங்கும். கொரோனா வைரசால் உண்டான சூழ்நிலையை நம்மை நாமே மறுகட்டமைப்பு செய்து கொள்வதற்கான வாய்ப்பாக மட்டும் கருதாமல், புதிய உலகை மறுகட்டுமானம் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

கொரோனாவால் உண்டான வாய்ப்பை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News