செய்திகள்
கோப்புபடம்

இந்தியாவில் 5734 பேருக்கு கொரோனா பாதிப்பு- 166 ஆக உயர்ந்த உயிரிழப்பு

Published On 2020-04-09 03:39 GMT   |   Update On 2020-04-09 03:39 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 540 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149ல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 473 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 738 பேருக்கும், டெல்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சமூக பரவலுக்கான அடுத்த நிலையை கடந்தால் மட்டுமே மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனவே, அனைத்து பகுதிகளிலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
Tags:    

Similar News