செய்திகள்
வைரல் புகைப்படம்

பொய்யானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய இதை செய்யனுமா?

Published On 2020-03-19 05:22 GMT   |   Update On 2020-03-19 05:22 GMT
கொரனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும் என தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.



கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் பாதிப்புடன் சேர்ந்து அதுபற்றிய போலி தகவல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், ஹேர்டிரையர் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளலாம் என்ற தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

இதே தகவலினை உண்மையென நம்பி பலர் அதனை வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து வருகின்றனர். ‘வீட்டில் ஹேர்டிரையர் இருந்தால், அதிலிருந்து வரும் சூடான காற்று மூலம் கொரோனா பாதிப்பை எளிதில் எதிர்கொள்ளலாம். வீடியோவை பாருங்கள்’ என வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில், ஹேர்டிரையர் கொண்டு முகம் முழுக்க சூடான காற்றை பீய்ச்சி அடிக்கும்போது கொரோனாவை எதிர்க்க முடியும். சூடான வெப்பநிலையில் கொரோனா வைரஸ் எளிதில் அழிந்து விடும் என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.



வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் துளியும் உண்மை இல்லை என தெரிகிறது. ஹேர்டிரையரில் இருந்து வரும் சூடான காற்று கொரோனாவை அழித்து விடும் என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News