செய்திகள்
டிரம்ப்

பாகிஸ்தான், சீனாவுக்கு எச்சரிக்கையாக அமைந்த டிரம்ப் இந்திய பயணம்

Published On 2020-02-26 06:25 GMT   |   Update On 2020-02-26 06:25 GMT
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிரம்ப், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை மறைமுகமாக எச்சரித்ததுடன் இதற்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் என்றும் கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவின் பக்கத்து நாடுகளாக பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் இந்தியாவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

பாகிஸ்தானை பொறுத்தவரை தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிட்டு பிரச்சினையை உருவாக்குகிறது.

அதேபோல சீனா, தென்சீன கடல்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

டிரம்ப் இந்திய சுற்றுப்பயணத்தில் இந்த இரு வி‌ஷயங்களும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கனவே அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியிலேயே பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களை டிரம்ப் மறைமுகமாக எச்சரித்தார். இந்தியா பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு தீர்வு காண இந்தியாவுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று கூறினார்.



நேற்று பிரதமர் - அமெரிக்க அதிபர் கூட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று நம்புவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

ஏற்கனவே லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகி தீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன.

டிரம்ப் எச்சரிக்கை காரணமாக இது கட்டுப்படுத்துப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சீன கடல் பகுதியில் சட்ட ரீதியான உரிமைகள் யாருக்கும் இல்லாத நிலையில் அனைத்து நாடுகளுக்கும் அதில் உரிய இறையாண்மை உள்ளது. அதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

எனவே சீனா இந்த வி‌ஷயத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவிலான விவகாரங்களில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவையான ஒத்துழைப்புகளை கொடுக்கும் என்றும் டிரம்ப் தனது உறுதியளிப்பாக கூறி இருக்கிறார்.

அதே நேரத்தில் இந்தியாவின் உள்நாட்டு விவரங்களில் அமெரிக்கா ஒதுங்கியே இருக்கும் என்பதும் அவரது பேச்சில் இருந்து தெரிய வந்திருக்கிறது.


Tags:    

Similar News