செய்திகள்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

கொரோனா வைரஸ் பரவல்: இந்திய தொழில்துறையில் அதிக பாதிப்பு இருக்காது - ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து

Published On 2020-02-19 22:07 GMT   |   Update On 2020-02-19 22:07 GMT
கொரோனா வைரஸ் பரவலால் இந்திய தொழில்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலால் சீன பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா, உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்பதால், அந்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு, உலக பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது, உலகம் முழுவதும் கண்காணிக்கப்பட வேண்டிய விவகாரம்.

இந்தியாவின் மருந்துகள் துறை, மின்னணு உற்பத்தி துறை ஆகியவை சீனாவை சார்ந்து இருப்பதால், அந்த துறைகள் மட்டும் பாதிக்கப்படலாம். அதை முறியடிக்க மாற்று வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன. மற்றபடி, இந்திய தொழில்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News