செய்திகள்
தி சிம்ப்சன்ஸ் ஸ்கிரீன்ஷாட்

கொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்?

Published On 2020-02-13 07:43 GMT   |   Update On 2020-02-13 07:45 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை கார்ட்டூன் நிகழ்ச்சி முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.


 
தி சிம்ப்சன்ஸ் கார்டூன் நிகழ்ச்சி மற்றும் ஆஸ்ட்ரிக்ஸ் காமிக் புத்தகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்கூட்டியே கணித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்படும் முன்பே அதுபற்றிய விவரங்கள் கார்டூன் மற்றும் காமிக் புத்தகத்தில் இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்ததில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்கள் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. மேலும் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் 1993-ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான தி சிம்ப்சன்ஸ் தொடரின் குறிப்பிட்ட எபிசோடில் ஜப்பானை கடுமையாக பாதித்த ஒசாகா காய்ச்சல் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தது. 



ஒசாகா காய்ச்சல் பற்றிய தி சிம்ப்சன்ஸ் வீடியோவில் கொரோனா வைரஸ் எனும் வார்த்தை சேர்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் துளி்யும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News