செய்திகள்
விமான நிறுவன ஊழியர்கள்

மது அருந்திவிட்டு பணிக்கு வந்த விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் இடைநீக்கம்

Published On 2019-10-28 19:35 GMT   |   Update On 2019-10-28 19:35 GMT
மது அருந்திவிட்டு பணிக்கு வந்த விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

விமான பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபடும் விமான நிறுவன ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசோதனை நடத்தப்பட்டதில், விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர், மது அருந்தி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர், பெங்களூரு விமான நிலையத்திலும், ஒருவர் மும்பை விமான நிலையத்திலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.
Tags:    

Similar News