search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airport staff"

    • பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
    • கோவை விமான நிலையத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் விமான நிலையத்துக்கு தினமும் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விமான பயணிகளை கவனிக்கும் முறை குறித்து சமீபத்தில் மத்திய அரசு சுற்றரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் நலன் கருதி் அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் தற்போது இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி விமான நிலைய ஊழியர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் விமான பயணிகளை வரவேற்று அவர்களின் தேவையை கேட்டறிந்து அதற்கேற்ப தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக முதியவர்களின் உடைமைகளை எடுத்து செல்லுதல், முதியவர்களை கைதாங்கலாக அன்புடன் அழைத்து செல்லுதல் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி விமான நிலைய வளாகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மேலும் சிறப்பாக இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொழும்பில் இருந்து கோவைக்கு பயணிகள் மூலம் 1½ கிலோ தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreAirport
    கோவை:

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று கோவைக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகீர் என்ற பயணி தனது கைப்பையில் 16 கட்டிகளாக 1.6 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்து விமான நிலைய ஊழியர்களான மனோஜ், சதிஷ் ஆகியோரிடம் தங்கம் இருந்த பையை கொடுத்தார். அப்போது அங்கு இருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 55 லட்சம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்படி தங்கத்தை பெற விமான நிலையத்தின் முன்புறம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் காத்து இருந்த திருச்சியை சேர்ந்த ராஜா என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதனையடுத்தி 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விமான நிலைய ஊழியர்களை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால் அவர்கள் மூலம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இந்த கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் மிஸ்ரா என்பவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #CoimbatoreAirport
    ×