செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் துருக்கி நாட்டு பயணம் ரத்து

Published On 2019-10-20 08:24 GMT   |   Update On 2019-10-20 08:24 GMT
பிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இம்மாத இறுதியில் துருக்கி நாட்டுக்கு செல்கிறார். அவர் அக்டோபர் 27, 28ம் தேதிகளில்  நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார் என இந்திய வெளியுறவு துறை தெரிவித்திருந்தது.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் துருக்கி அதிபர் தாயீப் எண்ட்ரோகன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்தார். 

இந்நிலையில், துருக்கி அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News