செய்திகள்
மக்களிடம் குறைகளை கேட்கும் ராகுல் காந்தி

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள வயநாடு மக்களை மீண்டும் சந்தித்தார் ராகுல் காந்தி

Published On 2019-08-27 13:00 GMT   |   Update On 2019-08-27 13:00 GMT
கேரளா மாநிலம் வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் காந்தி மீண்டும் சந்தித்தார்.
திருவனந்தபுரம்,

கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதற்கிடையே, வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களை சில வாரங்களுக்கு முன் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

வயநாட்டில் ராகுல் காந்தி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். முதல் நாளில் வயநாட்டில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.   மேலும் அவர்களது குறைகளை கேட்டறிந்தார். 

ஏற்கனவே, ஆகஸ்டு 11 முதல் 14-ம் தேதி வரை ராகுல் காந்தி வயநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிட்டடார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News