செய்திகள்
ப சிதம்பரம்

8 ஆண்டுகளுக்கு முன்பு திறப்பு விழாவில் பங்கேற்ற கட்டிடத்திலேயே அடைக்கப்பட்ட ப சிதம்பரம்

Published On 2019-08-23 02:22 GMT   |   Update On 2019-08-23 02:22 GMT
8 ஆண்டுகளுக்கு முன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட சி.பி.ஐ. தலைமையகத்தின் புதிய கட்டிடத்தில் ப சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி :

சி.பி.ஐ. தலைமையகத்தின் புதிய கட்டிடத்தில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தங்க வைக்கப்பட்டார். அந்த கட்டிடம், 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது உள்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், சக மந்திரிகளாக இருந்த வீரப்ப மொய்லி, கபில் சிபல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு அப்போதைய சி.பி.ஐ. இயக்குனர் ஏ.பி.சிங், அங்குள்ள வசதிகளை சுற்றி காண்பித்தார். அவற்றில் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் அடைக்கப்பட்ட விருந்தினர் இல்லமும் அடங்கும்.

இதற்கிடையே, சி.பி.ஐ. தலைமையக புதிய கட்டிடம், சுடுகாட்டு நிலத்தில் கட்டப்பட்டதால், அதன் ‘வாஸ்து’ சரியில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கட்டிடம் திறக்கப்பட்டதில் இருந்து சி.பி.ஐ. இயக்குனர்களாக இருந்தவர்கள் ஏதேனும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஏ.பி.சிங், ரஞ்சித் சின்கா ஆகியோர் சி.பி.ஐ. வழக்குகளில் சிக்கினர். விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிய பிரச்சினையில், அனில் சின்கா விமர்சனத்தை எதிர்கொண்டார். இணை இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால், அலோக் வர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
Tags:    

Similar News