செய்திகள்
மாநிலங்களவையில் பேசிய வைகோ

பாராளுமன்றத்தில் முதல் கேள்வியை எழுப்பிய வைகோ

Published On 2019-07-25 09:44 GMT   |   Update On 2019-07-25 09:44 GMT
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று பதவியேற்றுக்கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது முதல் கேள்வியை பதிவு செய்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பின் வைகோ மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் எழுப்பினார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது வைகோ பேசியதாவது:-

இந்தியாவில் மூடப்பட்ட ஆலைகளால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பது குறித்து அமைச்சர் பதில் தருவாரா?


சீனாவிலிருந்து ஆடைகளை பெறும் வங்கதேசத்தினர் அதனை சட்டவிரோதமாக இந்தியாவில் இறக்குமதி செய்வதே இந்த பின்னடைவுக்குக் காரணம். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார்.

அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று வைகோ கூறினார்.

முன்னதாக “அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்பு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று வைகோ சொன்னவுடன் அவையில் அமர்ந்து இருந்த பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார். 
Tags:    

Similar News