செய்திகள்
பிரியங்கா காந்தி

கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் - பிரியங்கா காந்தி

Published On 2019-07-20 08:53 GMT   |   Update On 2019-07-20 08:53 GMT
உ.பி.யில் சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று சென்றார். 

போலீசார் அவரை அனுமதிக்காததால், தொண்டர்களுடன் அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்காமல் போகப் போவதில்லை எனவும் கூறினார். அவர் தங்கவைக்கப்பட்டு இருந்த விருந்தினர் விடுதியில் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிலரது உறவினர்கள் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சந்திக்க விருந்தினர் விடுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அவர் ஆறுதல் அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். 
Tags:    

Similar News