செய்திகள்
மழை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 2 மாதம் தொடர்ந்து பெய்யும்

Published On 2019-07-08 04:53 GMT   |   Update On 2019-07-08 04:53 GMT
கேரளாவில் வருகிற ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை கனமழையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக 8-ந்தேதி தான் மழை பெய்யத் தொடங்கியது.

முதலில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமாக மாநிலம் முழுவதும் பெய்ததால் கேரளாவில் உள்ள பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ‘வாயு’ புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் குறைந்தது.

கேரள மாநிலத்திற்கு பெரிய அளவில் பயனளிக்கும் தென்மேற்கு பருவமழை இதுவரை போதுமான அளவு பெய்யாத நிலையே காணப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வருகிற ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 2 மாதங்கள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேப்போல வெப்ப சலனம் காரணமாகவும் கேரளாவில் மழை பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதேப்போல கேரளா உள்பட தெற்கு கடற்கரைகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், கோட்டயத்தில் உள்ள பருவ நிலை தொடர்பான ஆய்வு மையத்தின் இயக்குனர் பிரதீஷ் மம்மன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News