செய்திகள்

தேவாலயம் சென்றதால் இந்து பெண் எரித்து கொலை செய்யப்பட்டாரா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி

Published On 2019-06-25 06:47 GMT   |   Update On 2019-06-25 07:49 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்துவ தேவாலயம் சென்றதற்காக இந்து பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் நடுரோட்டில் மிகக்கடுமையாக தாக்கப்பட்டு பின் எரித்துக் கொல்லப்படும் காட்சிகள் நிறைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில், எரித்து கொலை செய்யப்பட்ட பெண் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இப்பெண் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு சென்று வந்த காரணத்தால் தான் நடுரோட்டில் அடித்து, எரித்து கொல்லப்பட்டார் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.  இதையடுத்து அப்பெண் உயிரிழக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.



வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், இந்த வீடியோவுடன் பரவும் தகவலில் குழப்பம் இருப்பதும் வீடியோ நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதும் உறுதியாகி இருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவினை பாகிஸ்தான் பயனர்களும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் இளம்பெண் நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில், அடித்து எரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்த போது, இந்த வீடியோ கௌதமாலாவின் ரியோ பிரேவோவில் மே 2015 இல் எடுக்கப்பட்டது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து அப்போது வெளியான செய்திகளில், கால் டாக்சி ஓட்டுனர் கொலை வழக்கில் தொடர்பு கொண்டிருந்ததால் பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த வீடியோ 2016 மற்றும் 2018 ஆண்டுகளிலும் இதேபோன்று தவறான தகவலுடன் வைரலாகி இருந்தது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பெருமளவு இழப்பை சந்தித்து இருக்கின்றனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர்.
Tags:    

Similar News