செய்திகள்

வாட்ஸ்அப்பில் வலம் வரும் அதிர்ச்சி வீடியோ - உண்மை தெரியுமா?

Published On 2019-05-24 12:33 GMT   |   Update On 2019-05-24 12:33 GMT
வாட்ஸ்அப் செயலியில் வேகமாக வலம் வரும் அதிர்ச்சி வீடியோவின் உண்மை பின்னணியை தொடர்ந்து பார்ப்போம்.



இந்தியாவில் 2019 பொது தேர்தல் நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஒட்டுமொத்த தேசமே புதிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், பழைய வீடியோ ஒன்று வைரலாகி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

வைரலாகும் ஒரு நிமிட வீடியோவில் அறையினுள் அதிகாரிகள் சோதனை செய்வதும், அந்த அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 



பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்தவர்களின் விவரங்களை ஒருவர் இந்தி மொழியில் சேகரிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. பொது தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட அரசியல் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி இருக்கிறது என்ற வாக்கில் தகவல்கள் பரப்பப்படுகிறது.

உண்மையில் தற்சமயம் பரவி வரும் வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்டது ஆகும். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
Tags:    

Similar News